திருச்சி, ஜூன் 25: திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர்.திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் ஜூன் 23ம் தேதி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது பெரியார் நகர் பாலம் அருகே போதை மாத்திரை விற்ற எடத்தெரு பகுதியை சேர்ந்த ரவுடி ஜான் எமிலி கிறிஸ்டோபர்(27) என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 6 போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்.
