போதை மாத்திரை விற்ற 5 பேர் கைது

 

திருச்சி,ஜூன் 22:திருச்சியில் போதை மாத்திரை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சி அரியமங்கலம், பாலக்கரை, காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் ஜூன் 20ம் தேதி போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது உக்கடை அருகே போதை மாத்திரை விற்ற அரியமங்கலம் முல்லைநகரைச் சேர்ந்த ரவுடி நிஷாந்த்(27), காந்திஜி நகரைச் சேர்ந்த ரெங்கநாதன்(22),போலீசார் கைது செய்தனர்.

காந்தி மார்க்கெட் பென்சனர் தெரு சந்து பகுதியை சேர்ந்த ரவுடி பாபு (31) மற்றும் கல்மந்தை பகுதியில் போதை மாத்திரைகள் விற்ற கார்த்திக் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல எடத்தெரு அண்ணாசிலை அருகே போதை மாத்திரை விற்ற ரவுடி அஜித்(28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 258 போதை மாத்திரைகள், ஊசிகள் மற்றும் ரூ.2000 பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: