அமெரிக்கா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த ஸ்கை டைவிங் போட்டியில் 60 வயது மேல் உள்ள 100க்கும் மேற்பட்ட முதியவர்கள் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஸ்கைடைவர்ஸ் ஓவர் சிக்ஸ்டி என பெயரிடப்பட்ட இந்த குழு, நடுவானில் உருவாக்கம் செய்து 2 உலக சாதனைகளை முறியடித்தது. இந்நிலையில், பயிற்சியை ஏற்பாடு செய்த அமைப்பின் படி, 101 முதியவர்கள் தங்களின் 4வது முயற்சியில் வெற்றிகரமாக ஒரு ஸ்னோஃப்ளேக் உருவாக்கத்தை உருவாக்கினர்.
இந்த குழு ஏற்கனவே 2 உலக சாதனைகளை படைத்துள்ளது. முதலில் கடந்த 2017ம் ஆண்டு 60 பேரை கொண்டு பெர்ரீசில் ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தது. இதையடுத்து, 2018ம் ஆண்டு சிகாகோவில் 75 பேரை கொண்டு முந்தைய சாதனையை முறியடித்து ஸ்கை டைவிங் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த 2 சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் கடந்த 15ம் தேதி 101 முதியவர்களை கொண்டு ஸ்கை டைவிங் செய்தது. இவர்கள் அனைவரும் 60 வயது முதல் 78 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
The post கலிபோர்னியாவில் உலக சாதனை: ஸ்கை டைவிங் செய்த 101 முதியவர்கள் appeared first on Dinakaran.