உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடல் ரிலீஸ்: பிரீத்தம் இசையமைத்துள்ள பாடலுக்கு ரன்வீர்சிங் நடனம்

மும்பை: இந்தியாவில் சர்வதேச உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அதிகாரபூர்வ பாடல் வெளியாகியுள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பணிகள் நித்யாவில் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இதற்கான சிறப்பு பாடலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. பாலிவுட் இசையமைப்பாளர் பிரீத்தம் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

ஸ்லோக்லால், சாவேரி வர்மா ஆகியோர் எழுதியுள்ள பாடலை பிரீத்தம், நாகேஷ் அசிஸ்ட், ஸ்ரீராம சந்திரா, அமித் மிஸ்ரா, ஜோனிதா காந்தி உள்ளிட்டோர் பாடியுள்ளனர். ரன்வீர்சிங் நடித்த இந்தப்பாடல் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ம் தேதி தொடங்கவுள்ளது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

The post உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பாடல் ரிலீஸ்: பிரீத்தம் இசையமைத்துள்ள பாடலுக்கு ரன்வீர்சிங் நடனம் appeared first on Dinakaran.

Related Stories: