வயநாடு நிலச்சரிவு; உயிரிழந்தவர்களின் குடுப்பத்தினருக்கு பிரதமர் அறிவித்திருக்கும் ரூ.2 லட்சம் இழப்பீட்டை 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை

சென்னை: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடுப்பத்தினருக்கு பிரதமர் அறிவித்திருக்கும் ரூ.2 லட்சம் இழப்பீட்டை 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பதிவில் கூறுகையில், கேரளா- வயநாடு பகுதியில் நடந்துள்ள நிலச்சரிவில் இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இந்தப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம். அவரதம் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் குடுப்பத்தினருக்கு பிரதமர் அறிவித்திருக்கும் 2 இலட்ச ரூபாய் இழப்பீடு மிகவும் குறைவானதாகும். எனவே, அதனை ரூபாய் 10 இலட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். நிலச்சரிவு ஆபத்து உள்ள மாநிலங்களாக வடகிழக்கு மாநிலங்களையே ஒன்றிய அரசு அடையாளப்படுத்தி நிதி ஒதுக்கியுள்ளது.

கேரளாவையும் அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைத் தேர்ந்தெடுத்த தொகுதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலம் என்பதால் இதனை அலட்சியம் செய்யாமல் மீட்புப் பணிகளையும், நிவாரண நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டுமென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

The post வயநாடு நிலச்சரிவு; உயிரிழந்தவர்களின் குடுப்பத்தினருக்கு பிரதமர் அறிவித்திருக்கும் ரூ.2 லட்சம் இழப்பீட்டை 10 லட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: