விவேகானந்தபுரம் அரசு பள்ளியில் காலை உணவை ருசித்து ஆய்வு செய்தார் கலெக்டர்

புதுக்கோட்டை : விவேகானந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் தயார் செய்யப்பட்டுள்ள காலை உணவுகளின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், 9ஏ-நத்தம் பண்ணை ஊராட்சி, விவேகானந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் தயார் செய்யப்பட்டுள்ள காலை உணவுகளின் தரம் குறித்து, மாவட்ட கலெக்டர்மெர்சி ரம்யா (நேற்று) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 17லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வர் 25.8.2023 அன்று தொடங்கி வைத்தார். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 1,048 துவக்கப்பள்ளிகள், 276 நடுநிலைப்பள்ளிகள், 2 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1,326 பள்ளிகளில் 71,006 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் தற்போது, 9ஏ-நத்தம் பண்ணை ஊராட்சி, விவேகானந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் தயார் செய்யப்பட்டுள்ள காலை உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, மேலும் காலை உணவுகளை உயர் தரத்துடன் தயார் செய்வதற்கு தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சீராக, உரிய நேரத்திற்குள் வருகை புரிகின்றனர்.

மேலும் மாணவ, மாணவிகள் காலை உணவுகளை சத்தான முறையில் உண்பதன் மூலம் சுறுசுறுப்பாக இருப்பது மட்டுமல்லாமல், நல்ல முறையில் கல்வி கற்கவும் முடிகிறது என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) ஜெயராமன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post விவேகானந்தபுரம் அரசு பள்ளியில் காலை உணவை ருசித்து ஆய்வு செய்தார் கலெக்டர் appeared first on Dinakaran.

Related Stories: