வண்டலூர் – சிங்கபெருமாள் கோயில் இடையே ஜிஎஸ்டி சாலையில் ரூ.20 கோடி செலவில் 7 நடை மேம்பாலங்கள்

சென்னை: வண்டலூர் – சிங்கபெருமாள் கோயில் இடையே ஜிஎஸ்டி சாலையில் சுமார் 20 கோடி செலவில் 7 நடை மேம்பாலங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. சில இடங்களில் பொதுமக்கள் சாலையை கடக்க சரியான நடைமேம்பாலம் இல்லாத காரணத்தினால் ஆபத்தான முறையில் சாலையை கடக்கின்றனர். இதனால் பெரிய விபத்துகள் ஏற்படுகிறது. இது போன்று விபத்துகளை தடுக்க அரசு தேவையான இடங்களில் நடைமேம்பாலம் அமைத்து வருகிறது.

அந்த வகையில் வண்டலூர் – சிங்கபெருமாள் கோயில் இடையே ஜிஎஸ்டி சாலையில் சுமார் 20 கோடி செலவில் 7 நடை மேம்பாலங்கள் கட்ட டெண்டர் கோரப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள், ரயில் பயணிகள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் தேசிய நெடுஞ்சாலையை பாதுகாப்பாக கடக்க இது உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரணியம்மன் கோவில், வண்டலூர் மற்றும் சிங்கபெருமாள்கோயில் ரயில் நிலையங்கள், தைலாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி, தைலாவரத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா, மறைமலை அடிகள் நகர் ஆகிய இடங்களில் இந்த நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த 7 நடைமேம்பாலத்திலும் மக்கள் பயன்படுத்துவதற்காக லிஃப்ட் மற்றும் படிக்கட்டுகள் இருக்கும். இந்த சாலை எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் காவல்துறையினருடன் இணைந்து விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்களை ஆய்வு செய்த பின்னர் நடைமேம்பாலம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. கட்டுமானப்பணி ஆறு மாதங்களில் முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post வண்டலூர் – சிங்கபெருமாள் கோயில் இடையே ஜிஎஸ்டி சாலையில் ரூ.20 கோடி செலவில் 7 நடை மேம்பாலங்கள் appeared first on Dinakaran.

Related Stories: