அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடுத்தடுத்து விபத்து: மினிவேன் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

அமெரிக்கா: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சரக்கு ரயில் ஒன்று மினி வேன் மீது மோதி செல்லும் வீடியோ வெளியாகி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் ஒடேசா நகரத்தில் லாரி ஒன்று மினி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. டெக்சாஸ் பொதுப் பாதுகாப்புத் துறைலாரி மற்றும் மினி வேன் மோதிய சம்பவம் குறித்து விசாரித்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மினி வேனில் இருந்த ஒருவர் பலியானார். அதிகாரிகளின் விசாரணையில், லாரி மோதியதில் மினிவேன் அருகே இருந்த ரயில்வே வழித்தடத்தை நோக்கி நகர்ந்து நின்றது. சிறிது நேரத்தில் அந்த வழித்தடத்தில் வேகமாக வந்த சரக்குகளை ஏற்றிவந்த ரயில் மினிவேன் மீது மோதியதில் கார் சுக்குநூறாக நசுங்கியது . சம்பவம் நடப்பார்க்கு முன்பாகவே அதில் இருந்த ஓட்டுநர் வெளியே குதித்து அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். விபத்து குறித்து ஒடேசா பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அடுத்தடுத்து விபத்து: மினிவேன் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: