இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுரேஷ் கோபி, “படங்களில் நடிக்க ஏற்கெனவே ஒப்பந்தம் செய்திருப்பதால், தற்போது அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லை என்று கட்சித் தலைமையிடம் கூறியிருந்தேன். ஆனால், கட்சித் தலைமை கூறியதால் பதவியேற்றுக் கொண்டேன்.மேலும், கோரிக்கையை ஏற்று அமைச்சர் பதவியில் இருந்து கட்சித் தலைமை தன்னை விடுவிக்கும் என்று நம்புகிறேன். எம்.பி.யாக திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன்,” என்றும் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு பெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ்கோபி.
பதவியேற்ற உடனேயே சுரேஷ்கோபி அளித்த பேட்டியால் பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மோடியின் அமைச்சரவையில் கேபினட் பொறுப்புக்கு பதில் இணை அமைச்சர் பொறுப்பு கிடைத்ததால் சுரேஷ் கோபி அதிருப்தி என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேட்டது கிடைக்காததால் பதவியேற்றதும் அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளார் சுரேஷ் கோபி. அமித் ஷாவை சந்திக்க சுரேஷ் கோபி நேரம் கேட்டும் கிடைக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன. ஏற்கனவே இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியின் பிரஃபுல் படேல் மறுப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
The post ஒன்றிய அமைச்சர் பதவி வேண்டாம், எம்.பி.யாக மட்டும் தொடர விருப்பம் :நடிகர் சுரேஷ்கோபி பேட்டி appeared first on Dinakaran.