இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திரிபுராவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒன்றிய அரசின் பங்காக ரூ.40 கோடியை முன்பணமாக விடுவிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் மத்திய அரசின் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்கள், ராணுவம், இந்திய விமானப் படையின் 4 ஹெலிகாப்டர்கள் ஆகியவை ஏற்கனவே மாநில அரசுக்கு உதவி வருகின்றன.திரிபுராவில் உள்ள நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் இந்த கடினமான காலங்களில் மோடி அரசு அவர்களுடன் தோளோடு தோள் நின்று போராடுவதைக் காண்பீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
The post திரிபுராவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 17 லட்சம் பேர் பாதிப்பு: வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.