இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் வந்த லிங்க் மூலம் கடன் வழங்கும் செயலிக்கு சென்று ஆன்லைன் மூலம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. வாங்கிய 5 ஆயிரம் ரூபாயை வட்டியுடன் ஓராண்டுக்கு முன்பே 20 ஆயிரம் ரூபாய் வரை செலுத்தியுள்ளார். இருப்பினும் ஆன்லைனில் கடன் வழங்கிய நிறுவனத்தினர் வாட்ஸ் அப் மூலம் ராஜேஷுக்கு தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். மேலும், ராஜேஷின் புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி, அதனை அவருக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜேஷ், பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வலங்கைமான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைனில் கடன் வாங்கிய இளைஞர் தற்கொலை..!! appeared first on Dinakaran.