×

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நவராத்திரி விழா: நிகழ்ச்சியை ஒட்டி கேரள – தமிழக போலீசார் அணிவகுப்பு மரியாதை

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட அரண்மனையில் விதவிதமான கொலு பொம்மைகளுடன் தசரா விழா விமர்சியுடன் தொடங்கியுள்ளது. மைசூரில் நடைபெறும் தசரா பண்டிகைக்கு இணையாக ராமநாதபுரத்தில் உள்ள சேதுபதி மன்னர்கள் அரண்மனையில் தசரா விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆயிரத்துக்கு மேற்பட்ட பாவைகள், கொலு பொம்மைகள் அரண்மையில் அழகுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாள்தோறும் இங்கு ஆன்மிக சொற்பொழிவு இசை கச்சேரி, பட்டிமன்றம், பரநாட்டியம், கிராமிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி இறுதி நாளான விஜய தசமி அன்று நடைபெற உள்ளது. ராமநாதபுரத்தில் நடக்கக்கூடிய முக்கிய திருவிழாக்களில் இந்த தசரா திருவிழாவும் ஒன்று.

திருவனந்தபுரம் பத்மநாபன் சுவாமி கோயிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள குமரி மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட சாமி விக்கரகங்கள் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இதையொட்டி குழித்துறை மஹாதேவர் கோயிலில் மேள தாளங்கள் முழங்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. தமிழக கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் இரு மாநில போலீசாரும் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதையுடன் விக்கரகங்கள் ஒப்படைக்கப்பட்டன. சாமி விக்கரகங்கள் சுசீந்திரம் கோயிலில் இருந்து யானை பல்லக்கில் ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாப கோயில் அரண்மனையை வந்தடைந்தன. வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டு பூஜைகள் செய்து ஊர்வலத்தை வரவேற்றனர். குழித்துறை மஹாதேவர் கோயிலில் நடைபெற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் நவராத்திரி விழா: நிகழ்ச்சியை ஒட்டி கேரள – தமிழக போலீசார் அணிவகுப்பு மரியாதை appeared first on Dinakaran.

Tags : Navratri Festival ,Padmanapa Swami Temple ,Thiruvananthapuram ,Kerala ,Tamil Police Parade ,Ramanathapuram ,Dasara Festival ,Ramanathapuram Samasthana Palace ,SEDUPATHI MONARCHS PALACE ,RAMANATHAPURA ,PARALLEL ,MYSORE ,— Tamil Police Parade ,
× RELATED மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை...