×

தேமுதிக காசு வாங்கும் கட்சியா? விஜயபிரபாகரன் பரபரப்பு பேச்சு

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேமுதிக சார்பில் நேற்றிரவு நடந்த முப்பெரும் விழாவில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பேசியதாவது: நாங்கள் காசு வாங்கும் கட்சி, பேரம் பேசுகிறோம் என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
நாங்கள் எப்போதும், யாரிடமும் பேரம் பேசியதில்லை; காசு வாங்கியதில்லை. கடந்த 2005ம் ஆண்டு கட்சி மாநாட்டை எங்களது சொந்த செலவில்தான் நடத்தினோம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கட்டும். ஆனால், தமிழகத்தில் அடுத்து அதிமுக-தேமுதிக கூட்டணி ஆட்சிதான் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தேமுதிக காசு வாங்கும் கட்சியா? விஜயபிரபாகரன் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMD ,Vijayaprabhakaran ,Periyakulam ,Vijayakanth ,Democratic Party ,Periyakulam, Theni district ,DMUD ,Vijayprabhakaran ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் கண்மாய் கரையை மணல் மூடை அடுக்கி பலப்படுத்தும் பணி