×

பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்து 12 பேர் காயம்

கடலூர்: பண்ருட்டி அருகே, துக்க வீட்டில் ஃப்ரீசர் பாக்ஸில் மின்சாரம் பாய்ந்து 12 பேர் காயம் அடைந்தனர். மேல்கவரப்பட்டு பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இன்று காலையில் உயிரிழந்தார். அஞ்சலி செலுத்த வந்தவர்கள், உடல் வைக்கப்பட்டிருந்த ஃப்ரீசர் பாக்ஸில் கை வைத்த போது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த லோகநாதனின் மனைவி உட்பட 12 பேர் மயக்கம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பண்ருட்டி அருகே மின்சாரம் பாய்ந்து 12 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Panruti ,Cuddalore ,Lokanathan ,Alkavaraphat ,Dinakaran ,
× RELATED பெஞ்சல் புயல் மற்றும்...