×

சீமானிடம் மரியாதையில்லை; நாதக நிர்வாகி விலகல்

செஞ்சி: விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியிலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாம் தமிழர் கட்சியில் கடந்த 9 ஆண்டுகளாக என்னால் முடிந்த வரை அனைத்து கட்சி பணிகளும் சிறப்பாக செய்தேன். 2020 இல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் ஆகவும் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராகவும் இருந்தேன்.

இந்த தொகுதியில் உள்ள எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது மற்றும் நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்க கூடாது என் இஷ்டப்படி தான் நான் செய்வேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள் உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை செலவு செய்யவும் கூறவில்லை என்று சீமான் என்னிடம் கூறினார். எனவே மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுகின்றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post சீமானிடம் மரியாதையில்லை; நாதக நிர்வாகி விலகல் appeared first on Dinakaran.

Tags : seaman ,Senchi ,Villupuram ,North ,District ,Naam Tamilar Party District ,Sukumar ,Naam Tamil ,Nathaka ,Dinakaran ,
× RELATED கூலி ஆட்கள் கிடைக்காமல் அவதி...