தேனியில் கிராமம் கிராமமாக சென்று டிடிவி. தினகரன் மனைவி அனுராதா இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு..!!

தேனி: தேனி அமமுக வேட்பாளர் டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக அவருடைய மனைவி அனுராதா பெரியகுளம் பகுதியில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்களிடம் அவர் பேசியதாவது; 14 ஆண்டுகளுக்குப் பிறகு வந்தபோதும், உங்களின் பாசம் மாறவில்லை. என் கணவர் மீது மக்கள் வைத்துள்ள அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. ஆர்.கே.நகரில் பெரிய கட்சிகளை எதிர்த்து என் கணவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற சின்னம்தான் குக்கர்.

அங்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குக்கர் சின்னத்துக்கான பட்டனை வாக்காளர்கள் அழுத்தி அழுத்தியே தேயும் நிலை ஏற்பட்டது. அதே போல் தேனியிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள குக்கரை பார்க்கும் போதெல்லாம் அமமுக சின்னம் ஞாபகத்துக்கு வர வேண்டும். தற்போது வெற்றி பெற்றால் தேனி தொகுதிக்கு மேலும் பல திட்டங்களை கொண்டு வருவார். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இத்தொகுதியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.

 

The post தேனியில் கிராமம் கிராமமாக சென்று டிடிவி. தினகரன் மனைவி அனுராதா இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: