தஞ்சாவூர், ஆக.2: தஞ்சாவூர் மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் 06.08.2025 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதிய பலன்கள் குறித்து தங்கள் குறைகளையும், ஆலோசனைகளையும் நேரில் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post தஞ்சையில் வரும் 6ம் தேதி சுதந்திர போராட்ட வீரர்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.
