×

திருத்தணியில் மின் சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

திருத்தணி, டிச.19: தமிழ்நாட்டில், மின் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் டிசம்பர் 14 தெடாங்கி, வரும் 20ம் தேதி வரை மின் சிக்கன வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருத்தணியில் நேற்று முன்தினம் மின் சிக்கன வார விழா விழிப்புணர்வு பேரணி நேற்று முன்தினம் நடைபெற்றது. அரக்கோணம் சாலையில் மலைக்கோயில் அடிவாரத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியில் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டனர். விழிப்புணர்வு பேரணியை திருவள்ளூர் மேற்பார்வை பொறியாளர் சேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருத்தணி கோட்ட செயற்பொறியாளர் முருகபூபதி முன்னிலையில் மாணவர்கள், மின்வாரிய ஊழியர்கள் இணைந்து கைகளில் பதாகைகள் ஏந்தி அரக்கோணம் சாலை, பேருந்து நிலையம், ம.பொ.சி சாலை, கடப்பா சாலை வழியாக சித்தூர் சாலை சந்திப்பு வரை பேரணியாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி மின் சிக்கனம் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியில் உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், ஆறுமுகம், கண்ணன், உதவி பொறியாளர்கள் உட்பட மின் வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags : E-austerity week ,Trithani ,THIRUTHANI ,TAMIL NADU ,E-SAVING WEEK FESTIVAL ,Mundinam Power Economy Week Festival ,
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...