தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை நடைமுறையில் இருந்து வந்தது பயணிகளின் வசதிக்காக 15/03/2024 முதல் பயண முன்பதிவு காலம் 30 நாட்களுக்கு பதிலாக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே தொலைதூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மேற்கண்ட வசதியை பயன்படுத்தி தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

The post தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயண முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: