தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 31ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 31ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் 31ம் தேதி மாலை 6.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தும் வகையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் கொள்கை ரீதியில் சில முடிவுகள் எடுப்பது தொடர்பாக இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது. அதேபோன்று சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 31ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: