தமிழ்நாட்டில் 14 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: வருங்கால வைப்பு நிதி அமைப்பு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 2022-23 நிதியாண்டில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர பணியில் சேர்ந்துள்ளதாக வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக கல்லூரி படித்து முடித்த இளைஞர்கள் பலர் நிரந்தர பணியில் சேர்ந்துள்ளனர். நாட்டில் புதிதாக உருவாகியுள்ள வேலைவாய்ப்புகளின் எண்ணிகை பணியாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைந்தோரின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்பட்டு வருகிறது.

அதன் வகையில் 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டில் 14 லட்சத்து 5 ஆயிரத்து 171 வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நிதியாண்டில் 12 லட்சத்து 84 ஆயிரத்து 986 வேலைகள் உருவான நிலையில் தற்போது இது 9.4% உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக 18-21 வயித்துக்குள்ளான 3 லட்சத்து 76 ஆயிரத்து 872 பேர் வேலையில் சேர்த்துள்ளனர். 18 வயதுக்கு கீழ் உள்ள 15,763 பேருக்கும், 22 முதல் 25 வயதுக்குள்ளானா 3 லட்சத்து 68 ஆயிரத்து 981 பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.

26 முதல் 28 வயதுக்குள்ள 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும் பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கல்லூரி படிப்பை முடித்த சில மாதங்களில் இளைஞர்கள் பலர் பி.எஃப். உள்ளிட்ட பலன்களுடன் கூடிய பணிகளில் சேர்ந்துள்ளது தெரியவருகிறது. தேசிய அளவில் இதே காலக்கட்டத்தில் 1.39 கோடி பேர் பி.எஃப். திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டை விட இது 13.22% அதிகமாகும்.

The post தமிழ்நாட்டில் 14 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: வருங்கால வைப்பு நிதி அமைப்பு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: