உலக கோப்பையில் 15 விக்கெட் சாய்த்து தொடர் நாயகன் விருது பெற்ற இந்திய வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் ஒரேயடியாக 12 இடங்கள் முன்னேறி 12வது இடத்தை பிடித்துள்ளார். சுழல் நட்சத்திரம் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸம்பாவுடன் 8வது இடத்தை பகிர்ந்துகொள்ள, உலக கோப்பையில் விக்கெட் வேட்டை நடத்திய இந்திய வேகம் அர்ஷ்தீப் சிங் 4 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 13வது இடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்தின் அடில் ரஷித், அன்ரிச் நோர்க்யா (தெ.ஆப்.), டி சில்வா (இலங்கை) முதல் 3 இடங்களில் உள்ளனர். டி20 பேட்டிங் தரவரிசையில் டிராவிஸ் ஹெட் (ஆஸி.), சூரியகுமார் (இந்தியா), ஃபில் சால்ட் (இங்கிலாட்ந்து), பாபர் ஆஸம் (பாக்.), முகமது ரிஸ்வான் (பாக்.) டாப் 5ல் உள்ளனர்.
The post டி20 ஆல்ரவுண்டர் தரவரிசை; ஹர்திக் பாண்டியா நம்பர் 1: முதல் இந்திய வீரராக சாதனை appeared first on Dinakaran.