* உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென் ஆப்ரிக்கா அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
* சீனா ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் 1 வீரர் யானிக் சின்னருடன் (இத்தாலி) மோதிய ஸ்பெயின் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் 6-7 (6-8), 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் 3 மணி, 21 நிமிடம் போராடி வென்று கோப்பையை முத்தமிட்டார்.
* சீனா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா), அரினா சபலென்கா (பெலாரஸ்), கரோலினா முச்சோவா (செக்.) தகுதி பெற்றுள்ளனர்.
* நியூசிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் சவுத்தீ பதவி விலகியதை அடுத்து, இந்திய அணியுடன் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக டாம் லாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
* தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள எஸ்ஏ20 தொடரின் 2025 சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ் அதிகபட்சமாக ரூ.2 கோடியே 7 லட்சத்துக்கு எம்ஐ கேப் டவுன் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இலங்கை வேகம் மதீஸா பதிரணா சூப்பர் கிங்ஸ் அணியின் ‘வைல்டுகார்டு’ வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
* டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வேகம் பும்ரா மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். பும்ரா (870), அஷ்வின் (869), ஹேஸல்வுட் (847), கம்மின்ஸ் (820), ரபாடா (820) டாப் 5ல் உள்ளனர்.
The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.