- அறிவியல் கண்காட்சி
- சுதர்சனம்
- வித்யாஷ்ரம்
- பள்ளி
- திருவள்ளூர்
- சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளி
- திருவேக்காடு
- திருவேக்காடு
- ஆவதி — பூந்தமல்லி நெடுஞ்சாலை
- கண்காட்சி
திருவள்ளூர்: திருவேற்காட்டில் உள்ள சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திருவேற்காட்டில் உள்ள சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் அறிவியல், கணிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சி தொடக்க விழாவிற்கு பள்ளி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா தலைமை தாங்கினார். முதல்வர் சந்தோஷ் குமார் அனைவரையும் வரவேற்றார். கல்வி இயக்குநர் சிவாஜி முன்னிலை வகித்தார்.
விழாவில் இந்தியன் ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் ஸ்ரீமதி கேசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்கட்சியில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 460 மாணவர்கள் பார்வையிட்டனர். இதில், இளம் அறிவியாளர்களான மாணவர்களின் இயங்கும் மாதிரி வடிவங்கள் மற்றும் நிலையான மாதிரி வடிவங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு மாணவர்களால் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் ஸ்ரீவெங்கடேஷ் ராஜா சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கினார்.
The post சுதர்சனம் வித்யாஷ்ரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி appeared first on Dinakaran.