மாணவர்கள் கோஷ்டி பூசலை தடுக்க நெல்லை பஸ்களில் சாதி மோதலை தூண்டும் பாடல்களை ஒலிபரப்ப தடை: போலீசார் எச்சரிக்கை

நெல்லை: மாணவர்கள் மோதலை தடுக்க நெல்லை பஸ்களில் சாதி மோதலை தூண்டும் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். நெல்லையில் சமீப காலமாக பஸ்களில் மாணவர்கள் கோஷ்டி சேர்ந்து மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இதனை தடுக்க நெல்லை சந்திப்பு போலீசார், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர், நடத்துனர் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களை நேற்று நேரில் வரவழைத்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இதில் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன் பேசுகையில், ‘‘பஸ்சில் பல சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பயணம் செய்வார்கள். அங்கு ஏற்படும் சிறு பிரச்னை சமூதாய பிரச்னையாகவும் உருவெடுக்கலாம். அதனால் பள்ளி மாணவர்கள் அடித்துக் கொண்டாலும் சரி அல்லது சந்தேக நபர்கள் பஸ்சில் ஏறினாலும் சரி உடனடியாக காவல் துறைக்கு தெரிவியுங்கள்.

பஸ்சில் படிக்கட்டுகளில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதை தடுக்க வேண்டும். அடாவடி செய்வர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் சில தனியார் பஸ்களில் சாதி மோதலை தூண்டும் வகையிலான பாடல்கள் ஒலிபரப்பப்படுவதாக தகவல்கள் வருகின்றன. இனிமேல் அது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம். யாரேனும் ஈடுபடுவது தெரிய வந்தால் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post மாணவர்கள் கோஷ்டி பூசலை தடுக்க நெல்லை பஸ்களில் சாதி மோதலை தூண்டும் பாடல்களை ஒலிபரப்ப தடை: போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: