×
Saravana Stores

தொடக்கக் கல்வி துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றியமைப்பு: தமிழக அரசாணை வெளியீடு

சென்னை: தொடக்கக் கல்வி துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட 1,581 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3,565 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், 2011-12ம் நிதியாண்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும்,

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு நியமனம் செய்ய 1282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கும் நியமனம் செய்ய 1581 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 6428 ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது.

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மற்றும் துறை தலைவர்களை உறுப்பினர்களாக கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் கடந்த 9.2.2024ல் நடைபெற்ற கூட்டத்தில், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியிடங்களாகவுள்ள 5146 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றியமைத்திடவும், ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 10 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியிடங்களாக உள்ள 3549 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றம் செய்தும், ஐந்தாண்டுகளுக்கு மேல் நிரப்பப்படாமல் உள்ள 16 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை புத்தாக்கம் செய்து நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி அமைத்திடவும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தொடக்கக் கல்வி துறைக்கு ஒப்பளிப்பு செய்யப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றியமைப்பு: தமிழக அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Primary Education Department ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு...