×
Saravana Stores

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு; நடிகை கஸ்தூரி கைதாகிறார்: சம்மன் அனுப்பும் பணியில் போலீசார் தீவிரம்

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பாக நடிகர் கஸ்தூரியிடம் விசாரணை நடத்த எழும்பூர் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 4ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இந்த பேச்சு அனைத்து தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது.

கஸ்தூரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அவர் மீது ஏராளமான புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் நடிகை கஸ்தூரி மீது புகார் அளித்திருந்தனர். அந்த புகாரின் படி எழும்பூர் போலீசார், நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் ேநற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். அதேநேரம் நடிகை கஸ்தூரி பேச்சால் இரு சமூதாயங்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவுவதால், அவரிடம் அவதூறாக பேசியது தொடர்பாக நேரில் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதனால் நடிகை கஸ்தூரிக்கு போலீசார் சம்மன் அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சம்மனை தொடர்ந்து நடிகை கஸ்தூரி கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரத்திலும், மதுரை, ஆண்டிப்பட்டி, திருச்சியிலும் கஸ்தூரி மீது போலீசில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

The post தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு பேச்சு; நடிகை கஸ்தூரி கைதாகிறார்: சம்மன் அனுப்பும் பணியில் போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kasthuri ,CHENNAI ,Egmore ,Chennai… ,
× RELATED குறிப்பிட்ட சமூகப் பெண்கள்...