மாநில அரசு சின்னம், வாகன பதிவு மாற்ற முடிவு 200 யூனிட் இலவச மின்சாரம் ரூ.500க்கு காஸ் சிலிண்டர் திட்டம்: தெலங்கானா அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

திருமலை: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் தேர்தல் வாக்குறுதியில் ஏற்கனவே 2 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தி வரும் ரேவந்த் ரெட்டி அரசு, மேலும் இரண்டு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதில் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்கு ரூ.500க்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தெலங்கானா அரசின் தற்போதைய சின்னம் அரச ஆட்சியை நினைவூட்டுவதாக உள்ளதால் அதை மாற்ற அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரஜாகவி ஆண்டே எழுதிய ஜெய ஜெயே பாடலை தெலங்கானா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக மாற்ற மற்றொரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. மேலும் வாகனப் பதிவில் TSக்கு பதிலாக TG யாக மாற்ற அமைச்சரவை முடிவு செய்தது.

 

The post மாநில அரசு சின்னம், வாகன பதிவு மாற்ற முடிவு 200 யூனிட் இலவச மின்சாரம் ரூ.500க்கு காஸ் சிலிண்டர் திட்டம்: தெலங்கானா அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: