மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சடலமாக கிடந்தது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சோனி (16) என்பதும், உறவினர்களுடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது மாமா வீட்டிற்கு செல்வதற்காக அகமதாபாத் – திருச்சி சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்துள்ளான்.
அப்போது சிறுவன் மட்டும் ரயில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளான். இதில், எதிர்பாராத விதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில், அதே ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுவனின் உடலை அவரது குடும்பத்தினரிடம் தாம்பரம் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.
The post படிக்கட்டில் பயணம் செய்தபோது ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில சிறுவன் பலி appeared first on Dinakaran.