ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் ஜோதி யாத்திரை துவக்கம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில்ராஜிவ்காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, ராஜிவ் ஜோதி யாத்திரையை காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு தொடங்கி வைத்தார். ஸ்ரீபெரும்புத்தூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி நினைவகம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ராஜிவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, அமைதியை முன்னிலைப்படுத்தி ராஜிவ் ஜோதி யாத்திரை கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு, கொண்டு செல்லப்படும் ஜோதி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிறந்த தினத்தன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, வரும் 20ம்தேதி ராஜிவ்காந்தியின் 80ம் ஆண்டு பிறந்தநாள் தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, ராஜிவ் ஜோதி மத நல்லிணக்க யாத்திரை தொடக்க விழா நேற்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் கே.வி.தங்கபாலு கலந்துகொண்டு, ஸ்ரீபெரும்புதூரில் புறப்பட்ட ராஜிவ் ஜோதி யாத்திரையை தொடங்கி வைத்தார். இந்த, ராஜிவ் ஜோதி கர்நாடக மாநிலம், பெங்களூரு வழியாக 10 நாட்கள் பயணம் சென்று டெல்லியை சென்றடைய உள்ளது. நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், ராஜிவ் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

The post ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் ஜோதி யாத்திரை துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: