தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் SETC பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் SETC பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பேருந்து நிலையத்தின் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார். ரூ.400 கோடி மதிப்பில் 88 ஏக்கரில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்ட பேருந்துகள்:

தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் SETC பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும். தென் மாவட்டங்களுக்கான SETC, TNSTC, PRTC மற்றும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.

தென்மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்:

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும். தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் பேருந்துகள் கோயம்பேடு வரை இயக்கப்படாது.; இனி கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் இருந்து மாநகர பேருந்துகள் நாளை முதல் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படும். SETC மற்றும் ஆம்னி பேருந்துகளின் செயல்பாடுகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

5 நிமிடத்துக்கு ஒரு மாநகரப் பேருந்து:

கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம் வரை 5 நிமிடத்துக்கு ஒரு மாநகரப் பேருந்து இயக்கப்படும். 6 அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வழியாக செல்லும். TNSTC, PRTC பேருந்துகளின் செயல்பாடுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

பொங்கலுக்குப் பின் முழுமையாக பேருந்துகள்:

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வண்டலூர் உள்ளிட்ட இடங்களுக்கு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கலுக்குப் பின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முழுமையாக பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் இன்று முதலே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

The post தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் SETC பேருந்துகள் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: