சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.48 லட்சம் உண்டியல் காணிக்கை

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயில் உண்டியலில் ரூ.48.62 லட்சம் காணிக்கை வசூலாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. 6 வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இதனால் இங்குள்ள உண்டியலில் அதிகளவில் காணிக்கை வசூலாகும். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில் அலுவலர் (பொறுப்பு) பிரகாஷ் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருக்கோயில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.48 லட்சத்து 62 ஆயிரத்து 109 ரொக்கமும், தங்கம் 54 கிராமும், வெள்ளி 4 கிலோவும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.

The post சிறுவாபுரி முருகன் கோயிலில் ரூ.48 லட்சம் உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: