சிங்கப்பூரில் பட்டுப்புழு, வெட்டுக்கிளி உள்ளிட்ட 16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பட்டுப்புழு, வெட்டுக்கிளி உள்ளிட்ட 16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து அந்த நாட்டு அரசு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 59 லட்சம் பேர் வசிக்கும் சிங்கப்பூரில் 37 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சீனர்கள் மற்றும் சீன பூர்விக குடிகள் ஆவர். சிங்கப்பூர் மக்கள் உணவாக உட்கொள்ள ஏற்கனவே சில பூச்சி இனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பட்டுப்புழு வெட்டுக்கிளி உள்ளிட்ட 16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்திக் கொள்ள சிங்கப்பூரி உணவு முகாமை அனுமதி அளித்துள்ளது.

இந்த அறிவிப்புக்காக நீண்ட நாட்களாக காத்திருந்த சிங்கப்பூர் உணவக உரிமையாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காடுகளில் வாழும் பூச்சிகளை உணவாக பயன்படுத்தக் கூடாது என்றும் மாறாக பண்ணைகளில் வளர்க்கும் பூச்சிகள் மற்றும் இடக்குமதி செய்யப்பட்ட பூச்சிகளை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள. இந்த சூழலில் பூச்சிகளை கொண்டு சுவைமிகு உணவு தயாரித்து வாடிக்கையாளர்களை கவர சிங்கப்பூர் உணவகங்கள் தயாராகி விட்டன. இதற்கான சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பூச்சி பண்ணைகளில் இருந்து பூச்சிகளை அவைகள் இறக்குமதி செய்ய உள்ளன. இந்த பூச்சி உணவுகளை மனிதற்களுக்கு மட்டுமல்லாது வீட்டு விலங்குகளுக்கும் கொடுக்கலாம் என்பது மற்றோரு செய்தி ஆகும்.

 

The post சிங்கப்பூரில் பட்டுப்புழு, வெட்டுக்கிளி உள்ளிட்ட 16 வகையான பூச்சி இனங்களை உணவாக பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசு அனுமதி..!! appeared first on Dinakaran.

Related Stories: