நல்ல பேட்ஸ்மேனாக இருந்த நான், பவுலராக மாறி இருக்கவே கூடாது: ரவிச்சந்திரன் அஷ்வின் ஓபன் டாக்..!

மும்பை: நல்ல பேட்ஸ்மேனாக இருந்த நான், பவுலராக மாறி இருக்கவே கூடாது என ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. இது கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் கண்டனங்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது அஸ்வின் WTC இறுதிப்போட்டியில் இடம்பெறாதது குறித்து பேசியுள்ளார். அப்போது; டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நான் விளையாடவே விரும்பினேன். போட்டி தொடங்கும் 48 மணி நேரத்திற்கு முன்னர்தான் ஆடும் லெவனில் இருக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தேன். நான் அணியில் இருந்திருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் என இணையத்தில் கருத்து பரவியது. ஆனால், அதில் எனக்கு நம்பிக்கை இல்லை, இடம் கிடைத்திருந்தால் சிறப்பாக விளையாடியிருப்பேன். இந்தியா – இலங்கை போட்டி ஒன்றை பார்த்துக்கொண்டு இருந்தேன். அப்போட்டியில் இந்திய அணியின் பவுலிங் படுமோசமாக இருந்தது.

சச்சின் டெண்டுல்கர் குவித்த ரன்களை, பவுலர்கள் சிதற விட்டுக் கொண்டு இருந்தனர். ஒருநாள் பவுலராக ஆகி, அவர்களை எல்லாம் விட சிறப்பாக பந்துவீச வேண்டும் என நான் விரும்பினேன். கேட்க சிறுபிள்ளைத்தனமாக இருக்கும், ஆனால், நான் அப்படித்தான் ஆஃப் ஸ்பின் பவுலராக தொடங்கினேன். ஆனால், நல்ல பேட்ஸ்மேனாக இருந்த நான், பவுலராக மாறி இருக்கவே கூடாது என்பதுதான் நான் ஓய்வு பெறும்போது வருந்தும் விஷயமாக இருக்கும் இவ்வாறு கூறினார்.

The post நல்ல பேட்ஸ்மேனாக இருந்த நான், பவுலராக மாறி இருக்கவே கூடாது: ரவிச்சந்திரன் அஷ்வின் ஓபன் டாக்..! appeared first on Dinakaran.

Related Stories: