சில்லி பாயின்ட்…

* இந்தியா – வங்கதேசம் அணிகளிடையே கான்பூர், கிரீன் பார்க் மைதானத்தில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டமும் நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது.

* இந்திய அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள வங்கதேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷாகிப் அல் ஹசன் அறிவித்துள்ள நிலையில், அவருக்கு பதிலாக மெஹிதி ஹசன் மிராஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வங்கதேச டி20 அணி: நஜ்முல் ஷான்டோ (கேப்டன்), டன்சித் ஹசன், பர்வேஸ் உசைன் இமான், தவ்ஹித் ஹிருதய், மகமதுல்லா, லிட்டன் தாஸ், ஜேகர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், மஹேதி ஹசன், ரிஷத் உசைன், முஸ்டாபிசுர் ரகுமான், தஸ்கின் அகமது, ஷோரிபுல் இஸ்லாம், டன்ஸிம் ஹசன் சாகிப், ரகிபுல் ஹசன்.

* ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடருக்கான பயிற்சி ஆட்டங்களில் ஸ்காட்லாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியையும் (பாக். 20 ஓவரில் 132/9; ஸ்காட்லாந்து 18 ஓவரில் 133/3), இலங்கை அணி 33 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தையும் (இலங்கை 20 ஓவரில் 143/7; வங்கதேசம் 20 ஓவரில் 110/9) வீழ்த்தின.

* இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு 310 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து 49.2 ஓவரில் 309 ரன் ஆல் அவுட் (பென் டக்கெட் 107, கேப்டன் ஹாரி புரூக் 72, சால்ட் 45, அடில் ரஷித் 36). ஆஸி. பந்துவீச்சில் ஹெட் 4, ஹார்டி, ஸம்பா, மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: