சில்லி பாயின்ட்…

* இந்தியா யு-19 – ஆஸ்திரேலியா யு-19 அணிகள் மோதும் முதல் டெஸ்ட் (4 நாள்) சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. 2வது டெஸ்ட் இதே மைதானத்தில் அக்.7ம் தேதி தொடங்கும்.
* ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர் கேமரான் கிரீன், இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். அவர் உடனடியாக நாடு திரும்பி சிகிச்சை பெற உள்ளார்.
* 2024-25 உள்ளூர் கிரிக்கெட் சீசன் முடிவில் ஓய்வு பெறப்போவதாக பாகிஸ்தான் நடுவர் அலீம் தார் (56 வயது) அறிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த நடுவர்களின் ஒருவரான இவர் 145 டெஸ்ட் மற்றும் 222 ஒருநாள் போட்டிகளில் பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஐபிஎல் 2025 சீசனில் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து தலா 3 போட்டிகள் கொண்ட டி20 (அக்.13, 15, 17 தம்புல்லா), ஒருநாள் (அக். 20, 23, 26 பல்லெகெலே) தொடர்களில் விளையாடும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
* ‘இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளிடையே நடக்க உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், உலக கிரிக்கெட்டின் மிகச் சிறந்த தொடராக இருக்கும். அதில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது’ என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைகேல் வாஹன் கணித்துள்ளார்.

* கிரீன் பார்க் ஸ்டேடியத்தின் ‘சி’ கேலரி, பார்வையாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக உத்தர பிரதேச மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகள் எச்சரித்ததை அடுத்து 4800 இருக்கைகள் கொண்ட அந்த ஸ்டாண்டின் மேல் பகுதியில் 1750 பேரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: