கார்கேயின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், சசி தரூர் நேற்றுமுன்தினம் எக்ஸ் தளத்தில் ஒரு பறவையின் படத்தை வெளியிட்டார். அதில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘‘வானம் யாருக்கும் சொந்தமில்லை. சிறகுகள் உங்களுடையது. பறப்பதற்கு யாரிடமும் அனுமதி கேட்காதீர்கள்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தான், பாஜவுக்கு தாவுவதைதான் சசி தரூர் சூசகமாக தெரிவித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த எம்.பி மாணிக்கம் தாக்கூர் எக்ஸ் பக்கத்தில், ‘‘வானில் பறக்க அனுமதி கேட்காதே. பறவைகள் உயர பறக்க அனுமதி தேவையில்லை. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு சுதந்திரப் பறவை வானத்தை கவனமாக பார்க்க வேண்டும். பருந்துகள், கழுகுகள் மற்றும் ‘கழுகுகள்’ எப்போது வேண்டுமானாலும் வேட்டையாடும். சுதந்திரம் இலவசம் அல்ல, குறிப்பாக வேட்டையாடுபவர்கள் தேசபக்தியை இறகுகளாக அணிந்திருக்கும் போது’’ என்று குறிப்பிட்டுள்ளார். வேட்டை பறவைகளின் படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து சசிதரூர், காங்கிரஸ் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
The post பாஜவில் சேருகிறாரா சசிதரூர்? வேட்டையாடுபவர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்: காங்கிரஸ் அறிவுரை appeared first on Dinakaran.
