செய்யாறில் சென்டர் மீடியன்களில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கொடி கம்பங்கள்

செய்யாறு : செய்யாறு நகரில் உள்ள சென்டர் மீடியன்களில் பாதுகாப்பு அற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பங்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் ஆற்காடு சாலை, காந்தி சாலை, மார்கெட், புதிய காஞ்சிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் உள்ள சென்டர் மீடியனில் பாதுகாப்பற்ற முறையில் இரும்பு கொடி கம்பங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் என பொது மக்களுக்கு இடையூறாகவும், விபத்துக்கள் ஏற்படும் விதத்திலும் அமைக்கப்படுகிறது.

மேலும், இரும்பு கொடி கம்பங்கள் காற்று பலமாக அடிக்கும் நேரங்களில் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படுகிறது. சாலையில் கொடியுடன் இரும்பு கம்பிகள் விழுந்து கிடக்கிறது. இதன் மீது பைக் ஏறும் போது விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் காயம் அடைந்து வருகின்றனர்.

எனவே, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் அனுமதியின்றி கொடி கம்பம், பேனர்கள், பொது அலுவலக சுவர்களிலும் கவனத்தை திசை திருப்பும் வகையில் உள்ள விளம்பரங்களை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செய்யாறில் சென்டர் மீடியன்களில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கொடி கம்பங்கள் appeared first on Dinakaran.

Related Stories: