3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; புதுக்கோட்டை தொழிலாளிக்கு நீதிமன்ற காவல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட யோவான் என்பவரை பிப்ரவரி 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த யோவான். அடையாறு பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர், சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து யோவானை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் 11 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகளை இதே போல பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரிய வந்தது. இந்த நிலையில், நேற்று மாலையில் கைது செய்யப்பட்ட யோவானை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு இன்று காலை போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, யோவானை வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, யோவான் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post 3 சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; புதுக்கோட்டை தொழிலாளிக்கு நீதிமன்ற காவல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: