செர்பியாவில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி..!!

செர்பியா நாட்டில் அதிகாலை வேளையில் காரில் வந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.ஒரு வாரத்திற்கு உள்ளாக அடுத்தடுத்து நிகழ்ந்த துப்பாக்கிச் சூடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேட் அருகே துபோனா என்றால் சிற்றூரில் நகரும் காரில் இருந்தவாறு மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இயந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் பொது மக்கள் 8 பேர் நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு போராடி வரும் அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

The post செர்பியாவில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: