செந்தில் பாலாஜி விரைவில் பூர்ண குணம் அடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது: பொன்முடி பேட்டி

சென்னை: “செந்தில் பாலாஜி விரைவில் பூர்ண குணம் அடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவரை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டியில் கூறுகையில், “செந்தில் பாலாஜி விரைவில் பூர்ண குணம் அடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நேற்று தமிழக முதல்வர் சொன்னதைப்போல ஒன்றிய அரசு பாஜக ஆட்சியில் இல்லாத அமைச்சர்களையும், அந்த கட்சியினரையும் பழிவாங்குகின்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

டெல்லியாக இருந்தாலும், கர்நாடகாவா இருந்தாலும், மேற்கு வங்கமாக இருந்தாலும், அங்கே இருந்த நடவடிக்கை தற்போது தமிழகத்திலும் தொடங்கியிருக்கிறது இருக்கிறது. இதற்கெல்லாம் அஞ்சுபவர் அல்ல தமிழக முதல்வர். எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும், திறமையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீண்ட காலமாக இருந்திருக்கிறது.

எங்களை எல்லாம் பழிவாங்குவதற்கு கடந்த காலங்களிலேயே ஏன் தளபதியே மிசாவில் போட்டு பழிவாங்கிய காலமெல்லாம் உண்டு. எதுவாக இருந்தாலும் அவைகளை எல்லாம் நாம் எதிர்கொண்டு ஒன்றிய அரசின் இந்த பொய் பிரச்சாரத்தை அரசியலுக்காக செய்கின்ற நிகழ்வுகளை தமிழக மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அதை இன்னும் இவர்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள்” என்றார்.

The post செந்தில் பாலாஜி விரைவில் பூர்ண குணம் அடைவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது: பொன்முடி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: