டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றிரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கையில், ‘பாஜ மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல் நிலை சீராக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்வானியின் உடல்நிலை குறித்து பாஜ தலைவர்கள், மருத்துவமனை நிர்வாகத்திடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்து வருகிறார்கள்.
The post பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! appeared first on Dinakaran.