பள்ளிகள் திறக்க 10 நாட்கள் உள்ள நிலையில் நோட்டு புத்தகங்கள், புத்தக பைகள் வாங்க அலைமோதும் கூட்டம்

நாகர்கோவில் : கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்க 10 நாட்களே உள்ள நிலையில் நோட்டு புத்தகங்கள், புத்தக பைகள் வாங்க கூட்டம் அலைமோதுகிறது.
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் வரும் ஜூன் 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பள்ளி மாணவ மாணவியருக்கு தேவையான சீருடைகள், புத்தக பை, லஞ்ச் பாக்ஸ், நோட்டு புத்தகங்கள், பென்சில் பாக்ஸ் போன்றவற்றை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் கடைகளில் பள்ளி குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் குவிந்துள்ளன. இவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சூப்பர் மார்க்கெட்கள் முதல் சாதாரண கடைகள் வரை நோட்டு புத்தகங்கள் உட்பட பள்ளி மாணவ மாணவியருக்கு தேவையான பொருட்களை குவித்து விற்பனை செய்து வருகின்றனர். இவற்றில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பள்ளி மாணவ மாணவியருக்கு தேவையான பொருட்கள் மார்க்கெட்டில் கடும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் சராசரியாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

சாதாரண பென்சில், பேனா, சீருடைகள் எல்லாம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30 சதவீதம் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. நோட்டு புத்தகங்கள் ₹30 முதல் ₹65 வரை விற்பனையாகிறது. இது 2 ஆண்டுகளுக்கு முன்பு ₹15க்கு விற்பனை செய்யப்பட்டது ஆகும். இதனை போன்று பென்சில், ரப்பர், ஷார்ப்பனர், பேனா போன்வற்றின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளது. புத்தக பைகள் குறைந்தபட்சம் ₹500க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

குறிப்பிட்ட பிராண்ட் நிறுவனங்களின் புத்தக பைகள் ₹1000 முதல் ₹1500 மற்றும் அதற்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. ஜாமென்ரி பாக்ஸ் ₹100 முதல் ₹300 வரை விலை உள்ளது. டிபன் பாக்ஸ் விலை ₹250ல் ₹500 ஆக உயர்ந்துள்ளது. ஷூக்கள் விலை ₹500 முதல் ₹1000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

The post பள்ளிகள் திறக்க 10 நாட்கள் உள்ள நிலையில் நோட்டு புத்தகங்கள், புத்தக பைகள் வாங்க அலைமோதும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: