சமஸ்கிருதம் அறிவியல் சார்ந்த மொழி என்ற ஆளுநரின் கருத்தை யாரும் பொருட்படுத்த தேவையில்லை: செல்வப்பெருந்தகை பேட்டி

ஸ்ரீபெரும்புதூர்: சமஸ்கிருதம் அறிவியல் சார்ந்த மொழி என்ற ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்தை யாரும் பொருட்படுத்த தேவையில்லை என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். ராஜிவ் காந்தியின் 80வது பிறந்தநாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில், காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். இதில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு, ராஜிவ் காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், ‘சமஸ்கிருதம் அறிவியல் சார்ந்த மொழி என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பேசிய கருத்து தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் நலனுக்கும் எதிரானது, அவரது பேச்சை யாரும் பொருட்படுத்த தேவையில்லை’ என்றார். மேலும், தவெக தலைவர் நடிகர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது கட்சி கொடியை ஏற்றி வைத்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு, தவெக தலைவர் நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துகள் என்றார்.

The post சமஸ்கிருதம் அறிவியல் சார்ந்த மொழி என்ற ஆளுநரின் கருத்தை யாரும் பொருட்படுத்த தேவையில்லை: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: