துப்புரவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர்: அம்பத்தூர் 7வது மண்டலத்தில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாஸ் கிளீனிங் என்ற பெயரில் மண்டலம் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டனர்.
அப்போது துப்புரவு ஆய்வாளர் சார்லஸ் ரமேஷ், தூய்மை பெண் பணியாளர்களிடம் தகாத வார்த்தையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெ.ஜெ நகர் போலீஸ் புகார் கொடுக்கப்பட்டு, 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சார்லஸ் ரமேஷ் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நேற்று அம்பத்தூர் மண்டல அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

The post துப்புரவு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: