சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம்: தமிழக அரசு உத்தரவு

சேலம்: பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கும் முறைகேடுகளுக்கு ஊழல்களுக்கு அழகிவருவது பெரியார் பல்கலைக்கழகம் இந்த பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஜெகநாதன் பதவியேற்ற இந்த மூன்று ஆண்டு காலத்தில் ஏராளமான ஊழல்கள் புகார்கள், ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.

இந்த துணைவேந்தர் செயல் அத்தனைக்கும் உறுதுணையாக இருந்தவர் பதிவாளர் தங்கவேல், இந்த பதிவாளர் தங்கவேல் மூலமாக பல்வேறு ஊழல்கள் முறைகேடுகளை செய்திருப்பதாக ஒரு தகவல் வெளியானது இது தொடர்பாக தான் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வைத்த தொடர் குற்றச்சாட்டின் அடிப்படையில் தான் அரசு கூடுதல் செயலாளர் பழனிசாமி ஐஏஎஸ் இவர் இதற்கு முன்பு ஒரு ஆய்வு குழு மூலம் பல்வேறு ஆய்வு நடத்தினர்.

இந்த பல்கலைக்கழகத்தில் எத்தனை முறைகேடுகள் நடந்திருப்பதாக என்பது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்ட. அந்த ஆய்வில் முறைகேடுகள் செய்தது உறுதியாகியுள்ளது. குறிப்பாக இந்த பெரியர்பல்கலைக்கழக பதிவாளராக இருக்கக்கூடிய தங்கவேல் கணினி அறிவியல் துறை தலைவராக இருக்கிறார், இவர் பணி நியமனம் உள்ளாட்சி தணிக்கை துரையின் அடிப்படையில் இடம்பெற்றது சட்டப்படி தவறானது என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு புகாரை அடுத்து உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

The post சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் பணியிடை நீக்கம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: