ரூ.1000 கோடி மோசடி: சோலார் டெக்னோ அலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை நடத்த முடிவு..!!

டெல்லி: ரூ.1000 கோடி மோசடி தொடர்பாக சோலார் டெக்னோ அலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1000 கோடி மோசடி செய்ததாக சோலார் டெக்னோ அலையன்ஸ் நிறுவனம் மீது புகார் எழுப்பப்பட்டிருந்தது. சோலார் டெக்னோ அலையன்ஸ் என்ற நிறுவனம் நாடு முழுவதும் அதிக வட்டி மற்றும் போனஸ் தருவதாக கூறி கோடிக்கணக்கில் வசூலித்து ஏமாற்றியுள்ளது.

கம்பெனி முதலீட்டு திட்டங்கள் குறித்து நடிகர்களை வைத்து விளம்பரம் செய்திருக்கின்றனர். முதலீட்டாளர்கள், கூடுதல் முதலீட்டாளர்களை அழைத்து வந்தால் வட்டி மற்றும் போனஸ் அதிகமாக கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி முதலீடுகளை வசூலித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் நாடு முழுவதும் 2 லட்சம் பேரிடம் 1000 கோடி அளவுக்கு வசூலித்து மோசடி செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், மோசடி குறித்து நடித்த பாலிவுட் நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் முக்கிய பங்கு வகித்ததாகவும், கோவாவில் கடந்த ஜூலை மாதம் நிறுவனம் தொடர்பாக நடந்த விழாவில் நடிகர் கோவிந்தா பங்கேற்று கம்பெனியின் விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

எனவே இந்த மோசடியில் நடிகர் கோவிந்தாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் ஒடிசா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கம்பெனியானது 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கம்பெனியை விளம்பரப்படுத்த ஏராளமான யூ-டியூப் சேனல்கள் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சோலார் டெக்னோ நிறுவனத்தின் வங்கி கணக்கை ஒடிசா போலீசார் முடக்கியிருக்கிறார்கள். பாலிவுட் நடிகர் கோவிந்தாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.

The post ரூ.1000 கோடி மோசடி: சோலார் டெக்னோ அலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் கோவிந்தாவிடம் விசாரணை நடத்த முடிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: