சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ‘சேவை உரிமைச் சட்டத்தை’ நிறைவேற்ற வேண்டும் என அன்புமணி வேண்டுகோள்விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும். குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்குரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்படும்.

பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே, தமிழக அரசின் சேவைகள் பொது மக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். நாளை தொடங்கவிருக்கும் சட்டப்பேரவையின் துணை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் இதற்கான சட்ட முன்வரைவை தாக்கல் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

The post சேவை உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: அன்புமணி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: