எஸ்பிஐ சென்னை வட்டத்தின் தலைமை பொது மேலாளர் ரவி ரஞ்சன் பொறுப்பேற்பு

சென்னை: எஸ்.பி.ஐ வங்கியின் சென்னை வட்ட தலைமை பொது மேலாளராக ரவி ரஞ்சன் பொறுப்பேற்றுள்ளார். இவர், தனது புதிய பதவியில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் வங்கிச் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பை ஏற்றுள்ளார். வங்கி துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு திறமை மிக்க வங்கியாளரான இவர், 1991ம் ஆண்டில் ஒரு புரொபேஷனரி அதிகாரியாக பாரத ஸ்டேட் வங்கியில் சேர்ந்தார்.

எஸ்பிஐ ஹாங்காங் கிளையின் துணை தலைவர், கார்பரேட் மையத்தின் துணை பொது மேலாளர்-ஈக்யுடி, பெங்களூருவின் பொது மேலாளர் மற்றும் எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ் லிமிடெட்டின் தலைவர் மற்றும் சிஓஓ போன்ற வங்கியின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

வங்கி துறையிலுள்ள தனது விரிவான அறிவு மற்றும் நிபுணத்துவத்துடன், எஸ்பிஐ சென்னை வட்டத்தை மேலும் உயரத்திற்கு இட்டுச் செல்ல தயாராக உள்ளார். வாடிக்கையாளர் மனநிறைவு, புதுமையான செயல்முறைகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் அவருக்குள்ள கவனம், இந்த மண்டலத்தில் வங்கியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும், எனபாரத ஸ்டேட் வங்கி, வட்டார தலைமையகம் தெரிவித்துள்ளது.

The post எஸ்பிஐ சென்னை வட்டத்தின் தலைமை பொது மேலாளர் ரவி ரஞ்சன் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: