×
Saravana Stores

ராமேஸ்வரம் தீவில் மன்னார் வளைகுடா சுழல் சுற்றுலா திட்டத்திற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

ராமேஸ்வரம்: மன்னாா் வளைகுடா உயிா்க்கோளக் காப்பக அறக்கட்டளையில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகள் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது மன்னாா் வளைகுடா உயிா்க்கோளக் காப்பகத்தின் முக்கிய பகுதியாக ராமேஸ்வரம் தீவு உள்ளது.

இங்கு உள்ள தனுஷ்கோடிக்கு ஆண்டுக்கு 2 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், மன்னாா் வளைகுடா உயிா்க்கோளக் காப்பக அறக்கட்டளையில் உள்ள சமூக அடிப்படையிலான அமைப்புகள் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் சமூக அடிப்படையிலான சூழல் சுற்றுலா ரூ.15 கோடியில் மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்த 15 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ராமேஸ்வரம் பவளப்பாறை, படகு சவாரி, சதுப்பு நில நுழைவு வாயில் பகுதி, குருசடை தீவு, சூழல் சுற்றுலா, பறவைகள் கண்காணிப்பு மையம், ஆமைகள் விளக்க மையம், கோதண்ட ராமர் கோவில் கழி முகப்பகுதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமேஸ்வரம் தீவில் மன்னார் வளைகுடா சுழல் சுற்றுலா திட்டத்திற்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Rameshwaram Island ,Rameswaram ,Ramanathapuram District Rameswaram Island ,Manna Bay Biological Archive Foundation ,Baiguda Uycological ,Dinakaran ,
× RELATED எந்த ஜாதக அமைப்பு உடையவருக்கு புதையல் கிடைக்கும்?